Monday, September 29, 2014

TO DO LIST


TO DO LIST என்ற இந்த கருவியின் மூலம் நமது தினசரி செயல் திட்டங்களை முழுமையாக நிர்வகித்துக்கொள்ளலாம்.

Sunday, September 28, 2014

GOOGLE KEEP


உங்களது அத்தியாவசியமான மற்றும் முக்கியமான குறிப்புகளை தனியாக எடுத்து வைத்து அதை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தின் உதவியுடன் மீட்டுக்கொள்ள உதவும் கருவி தான் இந்த GOOGLE KEEP.

GOOGLE CALENDER


நம்முடைய பணியை திட்டமிட்டு - எந்தெந்த பணியை எவ்வப்போது செய்ய வேண்டும் என மிகத் திறமையுடன் பட்டியலிட உதவுகிறது இந்த GOOGLE CALENDER

Saturday, September 27, 2014

WUNDERLIST


நமக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்க்கான பட்டியலை தயாரிக்கவும், நமது பயணத்திற்க்கான திட்டங்களை தயாரிக்கவும் உதவுகிறது இந்த WUNDERLISTஇந்த WUNDERLIST ஐ க்லிக் செய்வதன்மூலம் நீங்கள் இதை உங்கள் அலைபேசியில், கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

EVERNOTE


நமக்கு அவ்வப்போது தோன்றும் கருத்த்துக்களையும் ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்த்து குறிப்புகள் எழுத உதவுகிறது இந்த  Evernote

Monday, April 14, 2014

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லைஅவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Thursday, March 27, 2014

Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support  செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும்.
Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.
Google +
ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click  செய்யுங்கள்.

அடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.
போட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

Wednesday, March 26, 2014

வாட்ஸ்ஆப்


வாட்ஸ்ஆப்பில் புதிதாக பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.
வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாகவும் பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்

இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
 
கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.

பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.

இணைய தள முகவரி - 
http://convertico.org/

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM


SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority) எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம்
நடந்த 2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
Electron களில் உள்ள காந்தப் பண்பானசுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge) எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.